வெறுப்பைத் தூண்டும் தலைவர்களை நிராகரிக்க பராக் ஒபாமா அழைப்பு

வெறுப்புணர்வைத் தூண்டிவிடும் தலைவர்களை அமெரிக்கர்கள் நிராகரிக்க வேண்டுமென அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இனவாதத்தை இயல்பானதாக்கும் எந்தவொரு தலைவரையும் அமெரிக்கர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று அவர் கூறினார்.

அமெரிக்கா குறிப்பிட்ட ஒரு தரப்பைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமான தேசம் என்று கூறும் தலைவர்கள் அமெரிக்கர்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலை உருவாக்குவதாக அவர் தெரிவித்தார். இதில் ஒபாமா யாரையும் பெயர் குறிப்பிட்டுக் கூறவில்லை.

குடியேறிகளுக்கு எதிராகத் தெரிவித்த கருத்துகளால் வன்முறை மூண்டதைத் தொடர்ந்து உருவான குறைகூறல்களைச் சமாளிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முயன்றுவரும் வேளையில் ஒபாமாவின் கருத்து வெளியாகியுள்ளது.

வெறுப்புணர்வையும் வெள்ளையின மேலாதிக்கப்போக்கையும் டிரம்ப் கடந்த திங்கட்கிழமை தமது உரையில் கண்டித்திருந்தார்.

டெக்சஸிலும் ஒஹாயோவிலும் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 31 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவர் உரையாற்றினார்.

ஜனாதிபதி பதவியில் இருந்தபோது ஒபாமா, துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமையில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவர முயன்று தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wed, 08/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை