டிரம்பை சாடியோருக்கு வெடிகுண்டு அனுப்பியவருக்கு 20 ஆண்டு சிறை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பைச் சாடியவர்களுக்கு வெடிகுண்டை அனுப்பிவைத்ததாக ஒப்புக்கொண்ட ஆடவருக்கு 20 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புளோரிடாவைச் சேர்ந்த 57 வயது சீசர் சயொக் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் வெடிகுண்டுகளை அஞ்சல் வழி அனுப்பிவைத்தார்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, அரசியல் தலைவர் ஹில்லரி கிளிண்டன், முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன், நடிகர் ரொபர்ட் டி நிரோ போன்ற புள்ளிகள் உள்ளிட்ட 13 பேருக்கு வெடிகுண்டுகளை அனுப்பிவைத்தார் சயொக்.

அவை வெடிப்பதை அதிகாரிகள் தடுத்துவிட்டனர். அதிகாரிகள் தடுக்காவிட்டாலும் வெடிகுண்டுகள் வெடித்திருக்கமாட்டாது என்று புலனாய்வு அதிகாரிகள் கூறினர். அவை வெடிப்பதற்கான கருவி அஞ்சலுடன் இணைக்கப்படவில்லை.

எனினும் இடைத்தவணைத் தேர்தலுக்குச் சில வாரங்களே இருந்தபோது நடந்த இந்த வெடிகுண்டுச் சம்பவங்களால் அமெரிக்காவில் அப்போது பெரும் பீதி ஏற்பட்டது.

Wed, 08/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை