தாய்வானுக்கு போர் விமானம் விற்க அமெரிக்கா ஒப்புதல்

தாய்வானுக்கு 66 எப்–16 போர் விமானங்களை விற்பதற்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஒப்புதல் அளித்துள்ளது. இது சீனாவின் கோபத்தை தூண்டுவதாக உள்ளது.

8 பில்லியன் டொலர் உடன்படிக்கையில் புதிய வடிவிலான லொக்ஹீட் மார்டின் –பில்ட் போர் விமானங்கள் தாய்வான் பெறும் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட அறவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தனது வான் பகுதியில் சீன இராணுவத்தின் ஊடுருவர் அதிகரித்திருக்கும் நிலையில் வான் பாதுகாப்பை பலப்படுத்த தாய்வான் திட்டமிட்டுள்ளது.

தாய்வானை சீனாவின் ஒரு பகுதியாக குறிப்பிடும் சீனா அதனை மீண்டும் சீனாவுடன் இணைப்பதற்கு எதிர்பார்த்துள்ளது. எனினும் சுயாட்சியை கொண்டிருக்கும் அந்த தீவு அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை பேணி வருகிறது.

இந்த விற்பனை குறித்து கடந்த வாரம் முதல் முறை விபரம் வெளியான உடன் சீனா அதற்கு கண்டனத்தை வெளியிட்டிருந்தது. தாய்வானுக்கு அமெரிக்கா ஆயுதம் விற்பது சீனாவின் இறைமை மற்றும் அடிப்படை நலனை தரம்குறைப்பதாக உள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார்.

Thu, 08/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை