பயணிகளை பிணைக்கைதியாக பிடித்த நபர் சுட்டுக் கொலை

பிரேசிலில் பஸ்ஸில் வைத்து 37 பயணிகளை பிணைக் கைதியாக சிறைபிடித்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஓசையின்றி ஊர்ந்து சென்று அதிரடி தாக்குதலை நிகழ்த்தும் படையினர் அந்த நபரை சுட்டு கொன்றுள்ளனர்.

பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ நிட்டைரோ நகரங்களுக்கு இடையே பல கிலோமீற்றர் நீளம் கொண்ட பிரம்மாண்ட பாலம் அமைந்துள்ளது.

இந்த பாலத்தில் வந்துகொண்டிருந்த பஸ்ஸை பாலத்தின் நடுவே துப்பாக்கி முனையில் நிறுத்திய நபர் அனைவரையும் பிணைக் கைதியாக சிறைப்பிடித்தார்.

இதை அடுத்து அங்கு விரைந்த படையினர் பஸ்ஸை சுற்றி பாதுகாப்பு அரண் அமைத்தனர். ஒரு கட்டத்தில் பை ஒன்றை தூக்கி வீசுவதற்காக கடத்தல்காரர் பஸ்ஸில் இருந்து கீழே இரங்கியபோது அவரை படையினர் சுட்டுக் கொன்றனர்.

நான்கு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Thu, 08/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை