தப்பியோடிய 250 கைதிகளை தேடும் இந்தோனேசிய நிர்வாகம்

இந்தோனேசியாவின் மேற்குப் பப்புவா மாநிலத்தின் சிறையில் இருந்து தப்பிச் சென்ற 250க்கும் அதிகமான கைதிகளை பொலிஸார் தேடி வருகின்றனர். பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த திங்கட்கிழமை வீதிகளை மறித்து சிறைச்சாலைகள் உட்பட கட்டடங்களுக்கு தீமூட்டியபோதே இந்த கைதிகள் தப்பியோடியுள்ளனர்.

சுரபயா நகரில் இந்தோனேசிய தேசிய கொடியை அவமதித்ததாக பப்புவா மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்தே பதற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில் பப்புவாவுக்கு மேலதிக பொலிஸார் அனுப்பப்பட்டுள்ளனர். சொரொங் சிறை தீமூட்டப்பட்டிருப்பதோடு கைதிகள் மீது கல்லெறியப்பட்டது என்று நீதி அமைச்சின் பேச்சாளர் மார்லைன் லண்டே குறிப்பிட்டுள்ளார். “258 கைதிகள் தப்பியோடினர். வெறும் ஐந்து பேர் மாத்திரமே இன்று காலை திரும்பினர்” என்று லண்டே கூறினார்.

தப்பியோடும் கைதிகளை தடுக்கும் முயற்சியில் பல சிறைக்காவலர்கள் மற்றும் ஊழியர்களும் காயமடைந்ததாகவும் அவர் கூறினார். முன்னாள் டச்சு காலனியான பப்புவா 1961 இல் சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டபோதும் அதனை இந்தோனேசியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

Thu, 08/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை