கிரீன்லாந்தை விற்க மறுத்ததால் டிரம்பின் டென்மார்க் விஜயம் ரத்து

கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு விற்பனைக்கு இல்லை என்று டென்மார்க் பிரதமர் அறிவித்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் டென்மார்க் விஜயம் ரத்துச்செய்யப்பட்டுள்ளது.

டென்மார்க் மகாராணியின் அழைப்பின் பேரில் வரும் செப்டெம்பர் 2 ஆம் திகதி அந்நாட்டுக்குச் செல்ல டிரம்ப் திட்டமிட்டிருந்தார்.

டென்மார்க்கின் சுயாட்சி பெற்ற பகுதியான கிரீன்லாந்தை வாங்குவது குறித்த டிரம்ப் கடந்த வாரம் தனது ஆர்வத்தை வெளியிட்டிருந்தார். இது அபத்தமானது என்று குறிப்பிட்ட டென்மார் பிரதமர் மெட் பிரெட்ரிக்சன், டிரம்ப் இதனை தீவரமாக கூறியிருக்க மாட்டார் என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் தனது டென்மார்க் விஜயத்தை ரத்துச் செய்யும் அறிவிப்பை ட்லிட்டர் மூலம் வெளியிட்ட டிரம்ப், “சிறந்த மக்கள் வசிக்கும் டென்மார்க் மிக முக்கியமான நாடு, ஆனால் கிரீன்லாந்தை வாங்குவது குறித்த பேச்சுவார்த்தைக்கு தமக்கு ஆர்வமில்லை என்று பிரதமர் மெட் பிரெட்ரிக்சன் கருத்து வெளியிட்டதன் அடிப்படையில், இரண்டு வாரங்களில் திட்டமிடப்பட்ட எமது சந்திப்பு வேறு ஒரு நேரத்திற்கு ஒத்தி வைக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விஜயம் ரத்துச் செய்யப்பட்டது குறித்து அறிவிக்கப்பட்டதாக டென்மார் அரச இல்லாம் குறிப்பிட்டுள்ளது.

தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக கிரீன்லந்துப் பகுதியில் பனிப்படலங்கள் உருகி கடல்மட்டம் அதிகரித்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் அங்கு எண்ணெய், தாதுக்கள் போன்ற இயற்கை வளங்கள் உள்ளதால் சீனா, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் அங்கு ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றன.

கிரீன்லாந்தில் மூன்று அனைத்துலக விமான நிலையங்களைக் கட்ட சீனா முன்வந்தது. ஆனால் அதை டென்மார்க் நிராகரித்தது.

தற்போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கிரீன்லாந்தை வாங்குவது பற்றிப் பேசியதையடுத்து உலக நாடுகளின் கவனம் அதன் மேல் மீண்டும் திரும்பியுள்ளது.

ஜனாதிபதி டிரம்பின் யோசனையைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை என்ற போதும் ஆர்க்டிக் வட்டாரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அவரது நிர்வாகம் உணர்ந்திருப்பதை அது காட்டுவதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறினர்.

Thu, 08/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை