தென்னாபிரிக்க அணித் தலைவர் டுபிளசிசுக்கு சிறந்த வீரர் விருது

தென்னாபிரிக்க அணியின் சிறந்த வீரர் மற்றும் ஒருநாள் போட்டிக்கான விருதை அணித் தலைவர் டுபிளசி வென்றார்.

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை சார்பில் ஆண்டுதோறும் சிறந்த நட்சத்திரங்களுக்கான விருது வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான சிறந்த வீரர் என்ற விருதை அணித்தலைவர் டுபிளசி தட்டிச்சென்றார்.

அவர் கடந்த ஆண்டு 8 ஒருநாள் போட்டியில் இரண்டு சதம் உட்பட 434 ஓட்டங்கள் குவித்தார். டெஸ்ட் போட்டியிலும் (10 போட்டி, 463 ஓட்டங்கள் ) சோபித்தார். இதன்மூலம் இந்த விருதை வென்ற 11ஆவது வீரர் என்ற பெருமை பெற்றார். ஏற்கனவே, கிராம் ஸ்மித், டிவிலியர்ஸ், கலிஸ் உள்ளிட்டோர் இந்த விருதினை கைப்பற்றி இருந்தனர்.

ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர் விருதும் டுபிளசிக்கு தரப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டியில் சிறந்த வீரருக்கான விருதை குயின்டன் டி கொக் வென்றார். அவர் கடந்த ஆண்டு 10 போட்டியில் 392 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

டி20க்கான சிறந்த வீரர் விருது மில்லருக்கு தரப்பட்டது. சிறந்த அறிமுகத்திற்கான விருது துசன் வென்றார். பெண்கள் பிரிவில், சிறந்த வீராங்கனையாக டேனி வான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மரிஜான்னா (ஒருநாள் போட்டி), ஷப்னிம் (டி20) விருது வென்றுள்ளனர்.

Tue, 08/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை