வேவு பார்த்த அவுஸ்திரேலிய எழுத்தாளர் சீனாவில் கைது

அவுஸ்திரேலிய எழுத்தாளர் ஒருவர் சீனாவில் வேவுபார்த்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தக் கைது நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

யாங் ஹெங்ஜுன் எனும் அந்த ஆடவர் பெய்ஜிங்கில் பல மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அவர் ஓகஸ்ட் 23ஆம் திகதி அதிகாரபூர்வமாகக் கைது செய்யப்பட்டதாகவும் அவுஸ்திரேலியா கூறியது.

ஜனநாயக ஆதரவு ஆர்வலரான அவர் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவிலிருந்து சீனா சென்றபோது கைதுசெய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

யாங் அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டிருந்தால் அவரை விடுவிக்கவேண்டும் என்று அவுஸ்திரேலியா கூறியுள்ளது. கைது தொடர்பாகச் சீனா எந்தக் கருத்தும் வெளியிடவில்லை.

Wed, 08/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை