இந்தோனேசியாவில் பெரும் மின்தடை

பெரும் மின்தடையால் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா, ஜாவாவில் உள்ள அண்டை மாகாணங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

ஜாவாவில் உள்ள பல மின் நிலையங்களில் ஏற்பட்ட கோளாற்றால் கடந்த ஞாயிறு மாலை இந்த மின்தடை ஏற்பட்டதாக அந்நாட்டின் மாநில மின்சார நிறுவனமான பி.எல்.என் ஞாயிற்றுக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மின்தடை காரணமாக ரயில்களில் இருந்து பயணிகளை வெளியேற்ற வேண்டியிருந்தது என்று ரயில்வே நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் மின்தடை காரணமாக சில பகுதிகளில் போக்குவரத்து சமிக்ஞைகள் செயல்படாமல் போனதாலும் ரயில் பயணம் தடைப்பட்டதாலும் அதிகமான பயணிகள் சிக்கித் தவித்தனர்.

ஜகார்த்தாவின் பெரும்பாலான பகுதிகள் மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே அங்குள்ள அலுவலகங்கள், வீடுகளில் மக்கள் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்துகின்றனர்.

கிழக்கு ஜாவாவில் மத்திய, மேற்கு பகுதிகளுக்கு மின்சாரம் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், ஒன்பது மணித்தியாலங்களின் பின்னர் மின்சாரம் மீண்டும் வழக்கமான நிலைக்கு திரும்ப ஆரம்பித்தது.

Tue, 08/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை