லிபியாவில் திருமண நிகழ்வில் வான் தாக்குதல்: 40 பேர் பலி

தென் மேற்கு லிபியாவில் திருமண நிகழ்வொன்றின் மீது இடம்பெற்ற வான் தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டு பல டஜன் கணக்கானவர்கள் காயமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

லிபியாமின் பலம்மிக்கவரான கலீபா ஹப்தர் தரப்பினர் முர்சுக் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்தத் தாக்குதலை நடத்தி இருப்பதாக உள்நாட்டு செய்திகள் கூறுகின்றன. தபு பழங்குடியினரின் திருமண நிகழ்வொன்றின் மீதே அந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கிழக்கு லிபியாவை தளமாகக் கொண்ட ஹப்தர் படை கடந்த ஏப்ரல் 4 ஆம் திகதி தலைநகர் திரிபொலி மீதான தாக்குதல்களை ஆரம்பித்தது தொடக்கம் சுமார் 1,100 பேர் கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஹப்தர் படையின் ஆளில்லா விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக லிபியாவின் ஐ.நா ஆதரவு அரசாங்கம் கடந்த சனிக்கிழமை குறிப்பிட்டிருந்தது.

லியாவில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு ஹப்தருக்கு ஆதரவான கிழக்கு லிபிய தரப்பும் திரிப்போலியைத் தளமாகக் கொண்ட ஐ.நா ஆதரவு அரசுமே சண்டையிட்டு வருகின்றன.

Tue, 08/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை