துப்பாக்கிச் சூட்டை ஆதரித்த அமெரிக்க இளைஞன் கைது

துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களை ஆதரித்து இணையத்தில் கருத்து தெரிவித்துவந்த இளைஞர் ஒருவரை அமெரிக்க புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ஜஸ்டின் ஒல்சன் என்ற 18 வயது இளைஞர் ஒஹியோ மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று அதிகாரிகள் கூறினர்.

சட்ட அமுலாக்கல் அதிகாரி ஒருவரை தாக்கப்போவதாக அவர் இணையப் பக்கத்தில் மிரட்டல் விடுத்தது தொடர்பில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

அந்த இளைஞர் ஏற்கனவே துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை ஆதரித்து இணையத்தில் கருத்து தெரிவித்திருந்ததாக புலனாய்வுத் துறை அதிகாரிகள் கூறினர்.

அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது தந்தை வீட்டை அதிகாரிகள் சோதனை செய்தபோது 25 துப்பாக்கிகளும் 1,000 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். இணையப்பக்கத்தில் கருத்து தெரிவித்ததை ஒப்புக்கொண்ட அந்த இளைஞர் நகைச்சுவைக்காக அவ்வாறு கருத்து தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.

Fri, 08/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை