சிரிய அரச போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சியாளர்

கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு வடக்கு சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் மோதல் நீடித்து வரும் நிலையில் அரச போர் விமானம் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது.

கான் செய்கூன் நகருக்கு அருகில் அந்த ஜெட் வீழ்த்தப்பட்டதாக எதிர்த்தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். அந்த நகரில் இருந்து ஒரு சில கிலோமீற்றர்கள் ரஷ்ய ஆதரவு அரச படை முன்னேற்றம் கண்டதாக ஆரம்ப செய்திகள் கூறகின்றன.

கடந்த புதனன்று இடம்பெற்ற மோதல்களில் சுமார் 30 போராளிகள் கொல்லப்பட்டனர்.

சுட்டுவீழ்த்தப்பட்டிருக்கும் ரஷ்ய தயாரிப்பு சுகொய் போர் விமானதின் விமானி பிடிபட்டிருப்பதோடு அவர் ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் ஜிஹாத் குழுவினால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக சிரிய மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. இத்லிப் மாகாணத்தில் பலம்பெற்றிருக்கு தஹ்ரிர் அல் ஷாம், விமானி சிறைவைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தபோதும் மேலதிக தகவல்களை வெளியிடவில்லை.

அரச படை அண்மைய மாதங்களில் இந்த பிராந்தியத்தில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த பிராந்தியத்தை கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஜிஹாதிக்களிடம் இருந்து கைப்பற்றுவதற்கு ரஷ்யாவின் உதவியோடு சிரிய அரசு முயன்று வருகிறது.

எட்டு ஆண்டு சிவில் யுத்தத்தில் இத்லிப், வடக்கு ஹமா மற்றும் மேற்கு அலெப்போ மாகாணங்கள் மாத்திரமே அரச எதிர்ப்பாளர்கள் வசம் எஞ்சியுள்ளது.

Fri, 08/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை