சிதைந்து போன டைட்டானிக்கின் புதிய காட்சிகள் ஆய்வாளர்களால் வெளியீடு

சிதைந்து போன டைட்டானிக் கப்பலின் புதிய காட்சிகளை, ஆழ்கடல் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

1912ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் திகதி இங்கிலாந்தின் சவுதம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு டைட்டானிக் கப்பல் தன் முதல் பயணத்தைத் ஆரம்பித்தது.

எப்போதும் மூழ்காதது என அறிவித்து புறப்பட்ட டைட்டானிக் கப்பல் நான்கே நாட்களில் பனிப்பாறை மீது மோதி, மறுநாள் அதிகாலை கடலில் மூழ்கியது. அதில் தொழிலதிபர்கள், தொழில் முனைவோர், பத்திரிகையாளர்கள் ஆகிய பிரபலங்கள் உள்பட 2 ஆயிரத்து 223 பேர் பயணித்த நிலையில் 706 பேர் மட்டுமே உயிர்பிழைத்தனர்.

1517 பேரின் உயிரைப் பறித்த அந்த கோர விபத்தில் கனடாவின் நியூபவுண்ட்லேண்ட்டின் கரையில் இருந்து 400 மைல் தூரத்தில் 12 ஆயிரத்து 500 அடி ஆழத்தில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் 107 ஆண்டுகளுக்குப் பின் தற்போதுள்ள நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், விக்டர் வெஸ்கோவாவின் குழு ஆழ்கடலில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலின் சிதைந்த தோற்றத்தை படம்பிடித்துள்ளது.

முப்பரிமாண முறையில் வீடியோ பதிவிட்டு ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

அட்லாண்டிக் கடலின் 3,800 மீற்றர் ஆழத்தில் உள்ள இந்த கப்பலின் சிதைவுகள் தொடர்ந்து நல்ல நிலையில் உள்ளன.

எனினும் ஏனைய பாகங்களில் கடலில் காணாமல்போயுள்ளன.

Fri, 08/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை