ரொஹிங்கிய அகதிகள் பங்களாதேஷில் பேரணி

மியன்மாரில் இருந்து பங்களாதேஷுக்கு தப்பி வந்த இரண்டு ஆண்டுகள் நிறைவை ஒட்டி ஆயிரக்கணக்கான ரொஹிங்கிய அகதிகள் ஒன்றுதிரண்டு பேரணிகள் மற்றும் தொழுகை நடத்தியுள்ளனர். மீண்டும் மியன்மார் திரும்புவதற்கு பிரஜா உரிமை மற்றும் ஏனைய உரிமைகளை தரும்படி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பங்களாதேஷின் கொக்ஸ் பசாரில் இருக்்கும் குதுபலொங் முகாமில் நேற்று சுமார் 200,000 ரொஹிங்கியர்கள் அமைதியாக ஒன்று திரண்டனர். “இறைவர் பெரியவன், ரொஹிங்கியர்கள் வாழ்க” என்று கோசமெழுப்பி பேரணியிலும் அவர்கள் ஈடுபட்டனர். மியன்மாரின் ரகின் மாநிலத்தில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின்போது கடந்த 2017 ஓகஸ்ட் 25 ஆம் திகதி சுமார் 740,000 முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்டு ரொஹிங்கியர்கள் பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றனர். இவர்கள் ஏற்கனவே பங்களாதேஷில் இருக்கும் 200,000 ரொஹிங்கியர்களுடன் இணைந்தனர்.

இந்த அகதிகளை மீண்டும் மியன்மாருக்கு அனுப்பும் முயற்சி ஒன்று கடந்த வியாழக்கிழமை தோல்வி அடைந்த நிலையிலேயே இந்தப் பேரணி இடம்பெற்றுள்ளது.

Mon, 08/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை