வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக இருப்போம் என வட கொரியா கூறிய நிலையில், அந்நாடு இரண்டு குறுகிய தூர ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.

இதுபற்றி தென் கொரிய இராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில், “வட கொரியா தெற்கு ஹம்கியோங்கில் உள்ள சொந்தோக் என்ற நகரில் இருந்து சனிக்கிழமை காலை 6.45 மற்றும் 7.02 மணியளவில் ஜப்பானின் கிழக்கு கடல் பகுதியில் குறுகிய தூர இலக்கை அழிக்கும் இரண்டு ஏவுகணைகளை அனுப்பி பரிசோதனை செய்துள்ளது. அவை இரண்டும் மேக் 6.5 என்ற உயர் வேகத்தில் 380 கிலோ மீற்றர் தொலைவுக்கு 97 கிலோமீற்றர் உயரத்தில் பறந்து சென்றது.

எங்களுடைய இராணுவம், கூடுதலாக ஏவுகணைகள் ஏவப்படுகின்றனவா என்று நிலைமையை கண்காணித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 25ஆம் திகதியில் இருந்து வட கொரியா மேற்கொள்ளும் 7ஆவது ஏவுகணைச் சோதனை இதுவாகும்.

Mon, 08/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை