அமைச்சரவை உபகுழு ஆராய்ந்து இறுதி தீர்மானம்

பற்றி. கம்பஸ் விவகாரம்

பற்றிகம்பஸ் தொடர்பில் அமைச்சரவை உபகுழு விரிவாக ஆராய்ந்த இறுதித் தீர்மானத்துக்கு வரும் என உயர்கல்வி மற்றும் நீர்வழங்கல், நகரத் திட்டமிடல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு நல்லிணக்க அமைச்சர், நிதியமைச்சர், உயர்கல்வி அமைச்சர் மற்றும் தேசிய கொள்கைத் திட்டமிடல் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஆகிய நால்வரைக் கொண்ட அமைச்சரவை உபகுழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த உபகுழுவின் ஊடாக பற்றிகம்பஸ் தொடர்பில் எடுக்கவேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை

தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பற்றிகெம்பஸ் தொடர்பில் உயர்கல்வி அமைச்சின் துறைசார் மேற்பார்வைக்குழு முன்வைத்த அறிக்கை பற்றிய சபை ஒத்திவைப்பு விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும்போதே அமைச்சர் இந்தத் தகவல்களை முன்வைத்தார். இந்த விவகாரத்தில் அமைச்சரவை உபகுழு எடுக்கும் முடிவிலேயே தனியார் பல்கலைக் கழகங்களின் எதிர்கால முதலீடுகளின் நிலைமைகள் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பற்றிகெம்பஸை பட்டம் வழங்கும் நிறுவனமாக அங்கீகரிக்குமாறு உயர்கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதுபற்றி ஆராயும் குழு 35 தடவைகள் சந்தித்து கலந்துரையாடியிருந்தது. இறுதியாக ஏப்ரல் மாதம் நடந்த கூட்டத்தில் பற்றிகெம்பஸுக்கு பட்டம் வழங்குவதற்கான அனுமதியை வழங்கமுடியாது எனத் தீர்மானிக்கப்பட்டது.

துறைசார் மேற்பார்வைக்குழுவின் பரிந்துரைகள் பற்றி ஆராய அமைச்சரவை உபகுழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை உபகுழுவானது பற்றிகெம்பஸுக்கு பணம் கிடைத்தமை, காணி வழங்கப்பட்டமை, அதன் நிர்வாகம், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் போன்றன குறித்து ஆராய்ந்து முடிவொன்றுக்கு வரவேண்டும். இதனால் எடுக்கப்படும் தீர்மானமே நாட்டின் தனியார் பல்கலைக்கழகங்களின் முதலீடுகள் தொடர்பான எதிர்காலமும் தங்கியுள்ளது.

 

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

 

Thu, 08/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை