ஒப்சவர் –மொபிடெல் கிரிக்கெட் வீரர் தேர்வுக்குழுக் கூட்டம் திங்கட்கிழமை

41ஆவது ஒப்சவர் –மொபிடெல் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்யும் சிறப்புத் தேர்வுக்குழுக் கூட்டம் முன்னாள் இலங்கை அணித் தலைவர் ஹஷான் திலகரத்ன தலைமையில் வரும் திங்கட்கிழமை (12) கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெவுள்ளது.

இந்நிகழ்விற்கு இலங்கை பாடசாலை கிரிக்கெட் சம்மேளத்தின் தலைவர் மற்றும் தர்மபால வித்தியாலய அதிபர் ஓஷத பண்டிதரத்ன, இலங்கை பாடசாலை கிரிக்கெட் சம்மேளத்தின் செயலாளர் டில்ஹான் டி சில்வா மற்றும் இலங்கை கிரிக்கெட் நடுவர்கள் மற்றும் ஓட்டப்பதிவாளர்கள் சம்மேளன செயலாளர் தமிந்த குரே ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

சிறந்த முறையில் இலங்கை அணியை வழிநடத்திய திலகரத்னவின் தலைமையில் தேர்வுகள் இடம்பெறுவது பெரும் கெளரவமாகும். திலகரத்ன தற்போது 19 வயதுக்கு ஊட்பட்ட இலங்கை அணிக்காக முக்கிய பங்களிப்பு செய்து வருகிறார். அவர் நடுவர்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லேக்ஹவுஸ் தலைவர் கிறிஷான்த குரே மற்றும் மொபிடெல் நிறுவன தலைமை நிறைவேற்று அதிகாரி நலீன் பெரேரா உட்பட உத்தியோகபூர்வ அனுவரணையாளர்களான ANCL மற்றும் SLT மொபிடெல் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இலங்கை பாடசாலை கிரிக்கெட் சம்மேளனம் மற்றும் நடுவர்கள் சம்மேளயத்தின் மேலும் முக்கிய அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்கின்றனர்.

Sat, 08/10/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக