நியூசிலாந்துடன் முதல் டெஸ்ட்: தினேஷ் சந்திமாலுக்கு இடம்

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கான 15 பேர்கொண்ட குழாத்தினை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஐ.சி.சி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் தமது முதல் தொடருக்கான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த தொடருக்கான முதல் போட்டி எதிர்வரும் 14ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 22 பேர் கொண்ட குழாத்தினை இலங்கை கிரிக்கெட் சபை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இன்றைய தினம் (9) முதல் டெஸ்ட் போட்டிக்கான 15 பேர்கொண்ட குழாத்தை தெரிவுசெய்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாம்

திமுத் கருணாரத்ன (தலைவர்), அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், லஹிரு திரிமான்னே, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, நிரோஷன் திக்வெல்ல, தனன்ஜய டி சில்வா, அகில தனன்ஜய, லசித் எம்புல்தெனிய, சுரங்க லக்மால், லஹிரு குமார, ஓசத பெர்னாண்டோ, லக்ஷான் சந்தகன், விஷ்வ பெர்னாண்டோ

Sat, 08/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை