கிளிநொச்சியில் பாடசாலை இடைவிலகல் அதிகரிப்பு

குடும்பங்களின் வறுமையே காரணம் என தெரிவிப்பு

கிளிநொச்சி கோணாவில் பிரதேசத்தில் பாடசாலை இடைவிலகல் மற்றும் மாணவர்களின் வரவு குறைவு என்பன அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

கோணாவில் பிரதேசத்தில் சுமார் ஆயிரத்து 88குடும்பங்களைச் சேர்ந்த 4ஆயிரத்து 336பேர் வசித்து வருகின்றனர். இக் குடும்பங்களில் அதிகளவான குடும்பங்கள் தொழில் வாய்ப்பின்றி வறிய குடும்பங்களாக காணப்படுகின்றன.

வறுமை நிலை காரணமாக இப் பிரதேசங்களில் இருக்கின்ற பாடசாலைக் கல்வியைத் தொடர வேண்டிய வயதிலுள்ள கூடுதலான சிறார்கள் பாடசாலைகளுக்குச் செல்லாத நிலை காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

இங்குள்ள பாடசாலைகளான அக்கராயன் மகா வித்தியாலயம், கோணாவில் மகா வித்தியாலயம், யூனியன்குளம் பாடசாலை கோணாவில் ஆரம்ப பாடசாலை போன்ற பாடசாலைகளில் கணிசமான மாணவர்கள் ஒழங்கற்ற வரவுகளைக்கொண்ட மாணவர்களாகவும் காணப்படுகின்றனர்.

இப் பகுதிகளில் காணப்படுகின்ற இவ்வாறான சிறார்களை பாடசாலைகளில் மீளக்கற்றலில் இணைக்க முயற்சிக்கின்ற போதும் அக் குடும்பங்களின் வறுமை நிலை தொடர்பில் எவரும் கவனம் செலுத்துவதில்லை என பல்வேறு தரப்புக்களும் சுட்டிக்காட்டுகின்றன.

பரந்தன் குறூப் நிருபர்

Sat, 08/10/2019 - 08:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை