யானைத் தந்த விற்பனைக்கு சிங்கப்பூரில் தடை

யானைத் தந்தம் மற்றும் யானைத் தந்தத்திலான உற்பத்திகளுக்கு 2021ஆம் திகதியிலிருந்து உள்ளூரில் முற்றாக தடைவிதிப்பதற்கு சிங்கப்பூர் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சட்டவிரோத மிருக வியாபாரத்தைத் தடுக்கும் அரசாங்கத்தின் பிரசாரத்தை பலப்படுத்தும் நோக்கில் இத்தீர்மானம் எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 12ஆம் திகதி உலக யானைகள் தினம் கொண்டாடப்படும் நிலையில் சிங்கப்பூர் அரசாங்கம் இந்த அறிவிப்பை நேற்று முன்வைத்துள்ளது. அரசசார்பற்ற அமைப்புக்கள், யானைத்தந்த விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட கலந்துரையாடல்களுக்கு அமைய இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் பாரிய சட்டவிரோத யானைத்தந்த கடத்தலை சிங்கப்பூர் அதிகாரிகள் முறியடித்திருந்தனர். 300 ஆபிரிக்க யானைகளின் தந்தங்கள் சுமார் 12.9 மில்லியன் டொலர் பெறுமதியான யானைத்தந்தங்கள் சட்டவிரோதமாக கட்டுப்படுத்த முயற்சிக்கப்பட்டன. கொங்கோவிலிருந்து வியட்னாமுக்கு சிங்கப்பூர் ஊடாக கடல்மார்க்கமாக இந்த யானைத் தந்தங்கள் கடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

1990ஆம் ஆண்டு யானைத்தந்த சர்வதேச வியாபாரத்துக்கு தடை விதித்துள்ள சிங்கப்பூர், 2021ஆம் ஆண்டு செப்டெம்பரிலிருந்து உள்ளூர் யானைத் தந்த விற்பனை மற்றும் உற்பத்திகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Tue, 08/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை