‘ஜி7’ மாநாட்டில் ஈரானிய அமைச்சர் திடீர் பங்கேற்பு

பிரான்சில் நடைபெற்ற ஜ7 மாநாட்டில் ஈரான் வெளியுறவு அமைச்சர் மொஹமது ஜவாத் சாரிப் முன்னறிவித்தல் இன்றி கடந்த ஞாயிறன்று கலந்து கொண்டார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் உலகத் தலைர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டின்போது சாரிப், அதற்கு புறம்பான சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டார்.

அவரது இந்த விஜயம் பற்றி அமெரிக்க தூதுக்குழு அதிர்ச்சியை வெளியிட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் அதிகரித்திருக்கும் சூழலிலேயே இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் மற்றும் ஜனாதிபதியுடனான சந்திப்பு ஆக்கபூர்வமாக அமைந்ததாக சாரிப் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

“முன்னே இருக்கும் பாதை கடினமானது. ஆனால் முயற்சிப்பதுதான் பெறுமதி மிக்கது” என்று சாரிப் குறிப்பிட்டிருந்தார். அவர் ஜெர்மனி மற்றும் பிரிட்டன் அதிகாரிகளுடனும் குறுகிய நேர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

2015 ஈரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டு அமெரிக்கா விலகியதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது.

Tue, 08/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை