காலநிலைக்கு ஏற்றவாறு உப உணவு பயிர் செய்கையை மேற்கொள்ள வேண்டும்

பிரதி விவசாய பணிப்பாளர் சனீர்

நாட்டில் ஏற்பட்டிருக்கும் வரட்சியான காலநிலைக்கு ஏற்றவாறு விவசாயிகள் உப உணவு பயிர் செய்கையை மேற்கொள்வதன் மூலம் கூடிய வருமானத்தை பெற்றுக் கொள்ள முடியும் என அம்பாறை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் தெரிவித்தார்.

இறக்காமம் ஆஸ்பத்திரிசேனை ஏ.எச்.எம்.தஸ்லீம் வட்ட விதானையின் கண்டத்தில் பாசிப்பயறு அறுவடை விழாவின் போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

நாட்டின் நீரேந்து பகுதிகளில் போதிய மழைவீழ்ச்சி இல்லாததால் எதிர்பார்த்த அளவிற்கு இம்மாவட்டத்தில் நெற் பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடியாத துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகளாகிய நாங்கள் செய்தால் வேளாண்மையை மட்டுமே செய்வோம்' என்ற மனநிலையிலிருந்து மாறுபட்டு இனிமேல் நீர் கிடைக்காது என்ற எண்ணத்தோடு அடுத்த கட்டம் என்ன? என்பதை திட்டமிட்டால் தஸ்லீம் வட்டவிதானை போன்று துணிச்சலோடு முன்வந்து உப உணவு பயிர்ச் செய்கையில் ஒன்றான பாசிப்பயறு உற்பத்தி செய்து கூடிய அறுடை பெற்றிருப்பது இம்மாவட்டத்திலுள்ள ஏனைய விவசாயிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும் என்றார்.

இறக்காமம் தினகரன் நிருபர்

Tue, 07/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை