மாணவர்களின் ஆற்றலை வெளிக்கொணரும் 'அபிமன் வரம்'

தொழில்நுட்பத் திறன் அல்லது பொருத்தமான கல்விசார் தகைமைகளை பெற்றுக் கொள்வதற்கு போதியளவு வாய்ப்புகள் காணப்பட்ட போதிலும், ஐந்தில் ஒரு இளைஞர் தொழில் வாய்ப்பின்றி காணப்படுவதாக தொகை மதிப்பு, புள்ளி விபரங்கள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டிருந்தது.

கல்விச் சிறப்பை ஊக்குவிக்கும் செயற்பாட்டுக்கு இலங்கை எப்போதும் முக்கியத்துவமளித்துள்ளதுடன், அடுத்த தலைமுறையை கட்டியெழுப்பும் வகையில் செயலாற்றிய வண்ணமுள்ளது. தமது தொழில் வாழ்க்கையின் ஆரம்பப் பகுதியில் பல்வேறு தொழில்நுட்ப திறன்கள் மற்றும் தகைமைகளை பெற்றுக் கொள்வதற்கு மாணவர்களுக்கு வாய்ப்புகள் காணப்பட்ட போதிலும், கல்விச் சிறப்பு என்பதற்கு அப்பால் தாம் அதீத நாட்டம் காண்பிக்கும் ஏனைய துறைகளில் முன்னேற்றமடைவதற்கு பெருமளவு வாய்ப்புகள் மற்றும் வழிகாட்டல்கள் போன்றன காணப்படுகின்றன.

இதை கவனத்தில் கொண்டு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துடன்; இணைந்து ஃபொன்டெராவின் முன்னணி வர்த்தக நாமமான அங்கர், “அபிமன் வரம்” எனும் திட்டத்தை வடிவமைத்திருந்தது. இது 2019 ஜுலை 1 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டிருந்ததுடன், தமது முழு ஆற்றலையும் வெளிப்படுத்தவும், அதீத ஈடுபாடுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு அவசியமான சிந்தனைகளை இளைஞர்கள் மத்தியில் ஏக்குவிப்பதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது.

நாட்டின் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 10 பன்முகப்படுத்தப்பட்ட பிரிவுகளிலிருந்து 10 சிறந்த மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, மொத்தமாக 250 புலமைப்பரிசில்களை பெற்றுக் கொடுக்க அபிமன் வரம் நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது. இந்தப் பிரிவுகளில் கல்வி, புத்தாக்கம், தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவம், தொழில்முயற்சியாண்மை, விளையாட்டு, டிஜிட்டல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப அறிவு போன்றன அடங்கியுள்ளன.

விறுவிறுப்பான ரியால்டி நிகழ்ச்சியாக நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், நபர்களுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்த சிறந்த வாய்ப்பை வழங்கும். விண்ணப்பங்கள் ஜுலை 1 ஆம் திகதி முதல் ஆரம்பமாகியுள்ளதுடன், இதனைத் தொடர்ந்து தெரிவுகள் மற்றும் மதிப்பீடுகள் போன்றன இடம்பெறும். பத்து புலமைப்பரிசில் வெற்றியாளர்கள் உயர்மட்ட பயிற்சிப்பட்டறைகளுடன் இணைக்கப்படுவதுடன், அவர்களின் இலக்குகளை எய்துவதற்கு முன்னணி அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் உதவிகளை வழங்கும்.

40 வருடங்களுக்கு மேலாக பாலின் நலச் செழுமையினூடாக, இலங்கையின் நம்பிக்கையை வென்ற வர்த்தக நாமமான அங்கர், ஆடீஊ வலையமைப்பு மற்றும் நேறள 1ளவ உடன் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுக்கின்றன.

 

இந்த நிகழ்வின் பிரதான பங்காளராக செயற்படுவதற்கு மேலதிகமாக, அங்கரின் தாய் நிறுவனமான ஃபொன்டெரா, வெற்றியீட்டும் 10 பேரையும், புகழ்பெற்ற நிபுணர்களுடன் இணைத்து வருடம் முழுவதும் ஆலோசனைகளை பெற்றுக் கொடுப்பதற்கு முன்வந்துள்ளது. புலமைப்பரிசில் மற்றும் நிபுணர்களிடமிருந்து ஆலோசனைகளினூடாக, மாணவர்களுக்கு தமது அதீத ஆர்வமுள்ள துறையில் சிறப்பை எய்துவதற்கு அர்த்தமுள்ள வழிகாட்டல்களையும், ஊக்குவிப்பையும் வழங்கக்கூடியதாக இருக்கும்.

Mon, 07/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை