கீழ் மட்டத்திலுள்ளோரை மேம்படுத்தும் அரசே இன்று தேவை

கீழ் மட்டத்திலுள்ளவர்களை உயர்வடையச்செய்யும் அரசாங்கமொன்றே இன்று நாட்டுக்குத் தேவையென அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இதுவே இன்றைய மக்களினதும் நாட்டினதும் எதிர்பார்ப்புமாகுமென அவர் மேலும் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள கேலியபுரவில் நிர்மாணிக்கப்படவுள்ள 2499 மற்றும் 2500 ஆவது ஸ்ரீசுமங்கள நாஹிமி கம, சிரிசகபோகம உதாகம மாதிரிக் கிராமங்களிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் சஜித் பிரேமதாஸ இங்குதொடர்ந்தும் உரையாற்றும் போது, 2025 ஆம் ஆண்டாகும் போது 20,000 உதாகம மாதிரிக் கிராமங்களை நிர்மாணிக்கும் எமது இலக்கு நாடுபூராவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சிஅடைகின்றேன்.

இன்று வீடுகளைப் பெறவுள்ள 55 பயனாளிகள் இதற்கு முன்பும் எமது குசும் வீடமைப்புத் திட்டத்திலேயே வசித்து வந்தார்கள். இவர்கள் இங்கு அடிப்படை வசதிகளற்ற நிலையிலேயே வாழ்ந்த வந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடுபூராவும் 2500 உதாகம மாதிரிக் கிராமங்களை நிர்மாணிக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளபோதும் இதில் 300 மாதிரிக் கிராமங்கள் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலேயே நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமை விசேட அம்சமாகும்.

முன்னாள் ஜனாதிபதி எனது தந்தை அமரர் ரணசிங்க பிரேமதாஸ கம்உதாவ வேலைத் திட்டத்தினையும் ஜூன் மாதத்திலேயே முன்னெடுத்தார். இன்று இதனை முன்னெடுக்கும் போதும் பல்வேறுதரப்பினர் இதற்குமுட்டுக் கட்டைகள் இட்டாலும் நாம் இலக்கினை அடைவோம் என்றார்.

ஹம்பாந்தோட்டைகுறூப் நிருபர்

Mon, 07/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை