இஸ்ரேலை கண்டிக்கும் ஐ.நா தீர்மானத்தை அமெ. முடக்கம்

ஜெரூசலம் புறநகர் பகுதியில் பலஸ்தீன வீடுகளை இடிக்கும் இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டிக்கும் குவைட், இந்தோனேசியா மற்றும் தென்னாபிரிக்கா நாடுகள் கொண்டுவந்த ஐ.நா பாதுகாப்புச் சபை தீர்மானத்தை அமெரிக்கா தடுத்துள்ளது.

சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக 10 அடுக்குமாடிக் குடியிருப்புகளை கடந்த திங்கட்கிழமை இடித்ததாக இஸ்ரேல் குறிப்பிட்டது. ஆக்கிரமிப்பு மேற்குக் கரை ஊடாகச் செல்லும் இஸ்ரேலின் தடுப்பு வேலிக்கு நெருக்கமாக உள்ள கட்டடங்களே இவ்வாறு இடிக்கப்பட்டன. இதனால் 17 பலஸ்தீனர்கள் இடம்பெயரும் நிலை இருப்பதால் கட்டடங்களை இடிப்பதை நிறுத்தும்படி ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்திருந்தது.

இந்நிலையில் குவைட், இந்தோனேசியா மற்றும் தென்னாபிரிக்கா ஐந்து பந்திகள் கொண்ட அறிக்கை ஒன்றை கடந்த புதனன்று பாதுகாப்பு சபைக்கு கொண்டுவந்தன. இதில் கட்டடங்கள் இடிக்கப்படுவது குறித்து கவலை வெளியிடப்படுவதாக இருந்தது. இதில் மூன்று பந்திகளில் மாற்றங்கள் கொண்டுவந்த நிலையிலும் 15 அங்குத்துவ நாடுகள் கொண்ட பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா அதனை ஏற்க மறுத்துள்ளது.

இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா பக்கச்சார்பாக செயற்படுவதாக தொடர்ந்து குற்றம்சாட்டும் அமெரிக்கா, பாதுகாப்புச் சபையில் இஸ்ரேலை தொடர்ந்து காத்து வருகிறது.

Fri, 07/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை