சீனாவில் இரு நிலச்சரிவுகளில் 16 பேர் பலி: 30 பேர் மாயம்

தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட இரு நிலச்சரிவுகளில் குறைந்தது 16 பேர் பலியாகி இருப்பதோடு மேலும் 30 பேர் காணாமல்போயுள்ளனர்.

குன்சி மாகாணத்தின் சுயிசங் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் 21 வீடுகள் புதையுண்டதோடு குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக சீன அரச தொலைக்காட்சியான சி.சி.டீ.வி செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் 11 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதோடு 30 பேர் தொடர்ந்து காணாமல்போயுள்ளனர். கடும் மழையே இந்த நிலச்சரிவுக்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.

தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் குறித்த பகுதியைச் சூழவிருக்கும் 800க்கும் அதிகாமானோர் காப்பற்றப்பட்டுள்ளனர்.

இதனிடையே முன்னதாக ஏற்பட்ட நிலச்சரிவு ஒன்றில் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் ஆறு பேர் காணாமல்போயுள்ளனர்.

சீனாவின் மலைப்பாங்கான பகுதிகளில், கனத்த மழையின் காரணமாக நிலச்சரிவுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

Fri, 07/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை