பனியில் புதையுண்ட மெக்சிகோ நகரங்கள்

மெக்சிகோவின் குவாடலஜரா நகரில் ஆலங்கட்டி புயல் வீசியதை அடுத்து ஆறு புறநகர் பகுதிகளை பனிக்கட்டி மூடியுள்ளது. சில பகுதிகளில் 5 அடி உயரத்தில் பனிக்கட்டி மூடியிருப்பதோடு வாகனங்களும் புதையுண்டுள்ளன.

வீதிகளில் இருந்து பனித் தட்டுகளை அகற்றுவதற்கு சிவில் பாதுகாப்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறான ஒரு காட்சியை இதற்கு முன்னர் பார்த்ததில்லை என்று ஜலிஸ்கோ ஆளுநர் என்ரிக் அல்பாரோ ரமிரஸ் குறிப்பிட்டுள்ளார். “ஒரு மீற்றர் அளவுக்கு பனி உயர்ந்திருந்தது. வெளியேறுவதற்கு நாம் அதன்மீது ஏறிக் கடக்க வேண்டி இருந்தது” என்று அவர் தனது ட்விட்டரில் குறிப்பிட்டார்.

நகரும் பனிக்கட்டிகளால் சில பகுதிகள் ஆறு போன்று தோற்றமளிப்பதோடு வீட்டுக் கூரைகள் மற்றும் கார் வண்டிகளுக்கு மேல் இருந்து பலரும் காப்பற்றப்பட்டுள்ளனர்.

பனிக்குள் புதையுண்டதால் பல வாகனங்களும் சேதமடைந்துள்ளன. எனினும் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Tue, 07/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை