டெக்சாஸில் சிறு விமானம் விழுந்து 10 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் டெக்சாஸில் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று கட்டிடத்தில் மோதிய விபத்தில் விமானத்தில் இருந்த 10 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அடிசன் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட விரைவிலேயே இரட்டை எஞ்சின் கொண்ட இந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருக்கும் கொட்டகையில் மோதியது. பின்னர் சிறிது தொலைவுக்கு சென்று தரையில் விழுந்து தீப்பிடித்தது.

விமானம் மோதியதால் விமானக் கொட்டகை கட்டிடத்தில் மிகப்பெரிய ஓட்டை விழுந்ததுடன், கட்டிடமும் தீப்பிடித்தது. அந்த கட்டிடத்தில் ஆட்கள் யாரும் இல்லாததால் அங்கு உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு மத்திய விமான போக்குவரத்து நிர்வாக அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இந்த விபத்தில் கொல்லப்பட்டவர்கள் குறித்த விபரத்தை நிர்வாகம் உடன் வெளியிடவில்லை. எனினும் அவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.

இந்த விமானம் எஞ்சின் கோளாறுக்கு உள்ளானதாக பெயர் குறிப்பிடாத ஒருவர் சி.பி.எஸ் செய்தி நிறுவனத்திற்கு கூறியபோதும் அதனை உறுதி செய்ய முடியவில்லை.

Tue, 07/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை