கப்பலை மாற்றிக்கொள்ளும் ஈரான் யோசனையை பிரிட்டன் நிராகரிப்பு

பிரிட்டன் தடுத்து வைத்திருக்கும் தனது எண்ணெய் கப்பலை விடுவித்தால் தாம் தடுத்துவைத்திருக்கும் பிரிட்டனின் கப்பலை விடுவிப்பதாக ஈரான் தெரிவித்த யோசனையை பிரட்டன் நிராகரித்துள்ளது.

இம்மாத ஆரம்பத்தில் ஈரானிய அதிரடிப் படை வீரர்கள் பிரிட்டனின் எண்ணெய் கப்பலைத் தடுத்து வைத்ததிலிருந்து ஈரானுக்கும் பிரிட்டனுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

சிரியாவுக்கு எதிராகப் போடப்பட்டுள்ள தடைகளுக்கு எதிராக ஈரான் செயல்பட்டது என்ற காரணத்தால், ஜிப்ரால்டாவுக்கு அருகில் ஈரானிய எண்ணெய் கப்பலை பிரிட்டிஷ் படைகள் தடுத்து வைத்த பின்னர், ஈரான் பதில் நடவடிக்கையாக பிரட்டனின் கப்பலைத் தடுத்து வைத்தது.

“இது பண்டமாற்று சம்பந்தப்பட்டது அல்ல. இது அனைத்துலக கடல் சட்டம் மற்றும் அனைத்துலக நீதித்துறை பற்றியது. அது எக்காலத்திலும் கட்டிக்காக்கப்பட வேண்டும்” என்று பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்தார் என்று பி.பி.சி வானொலி கூறியது.

Wed, 07/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை