இந்தோனேசிய தீவில் சக்தி வாய்ந்த பூகம்பம்

இந்தோனேசியாவின் சுற்றுலாத் தளமான பாலி தீவில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தில் கட்டடங்களுக்கு விரிசல் ஏற்பட்டதோடு மக்கள் அச்சத்தில் தமது வீடுகளை விட்டு ஓட்டம்பிடித்தனர்.

இந்த தீவின் தலைநகரான டென்பாசாரவில் இருந்து தென் மேற்காக 82.1 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த பூகம்பம் உள்ளுர் நேரப்படி நேற்றுக் காலை 5.7 புள்ளி அளவில் பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் குறிப்பிட்டுள்ளது. இந்த அதிர்வு ஜாவாவின் அண்டை தீவான பன்யுவாங்கியிலும் உணரப்பட்டதோடு, ஒப்பீட்டளவில் 91 கிலோமீற்றர் ஆழத்தில் தாக்கியதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

பூகம்பத்தினால் ஏற்பட்ட அச்சம் பற்றி குடியிருப்பாளர்கள் விபரித்துள்ளனர். “அதிர்வினால் எனது குழந்தை விழுந்ததை அடுத்து நான் அழுவிட்டோன். அது மிகச் சக்திவாய்ந்ததாக இருந்ததோடு நான் வெளியே ஒடினேன். பலரும் வீதிகளுக்கு ஒடி வருவதை நான் பார்த்தேன்” என்று ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டார்.

20க்கும் அதிகமான கட்டடங்களுக்கு சேதங்கள் ஏற்பட்டபோதும் எவருக்கும் பாதிப்பு இல்லை என்று அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. முன்னதாக கடந்த ஞாயிறன்று இந்தோனேசியாவின் தொலைதூர மலுகு தீவில் 7.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தில் மூவர் கொல்லப்பட்டு சுமார் 1,000 வீடுகள் சேதமடைந்தன.

Wed, 07/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை