இறந்து பிறந்த குழந்தைக்கு தாய் குற்றமற்றவரென தீர்ப்பு

கழிப்பறையில் குழந்தை பெற்றபோது அந்தக்கு குழந்தை இறந்து பிறந்ததற்காக கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட எல் சால்வடோர் பெண் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

குழுந்தை இறந்து பிறந்ததாக அந்தப் பெண் குறிப்பிட்டபோதும் அது ஒரு கருக்கலைப்பு என அரச வழக்கறிஞர்கள் வாதிட்டனர். உலகின் மிகக் கடுமையான கருக்கலைப்புச் சட்டம் கொண்ட நாடுகளில் ஒன்றாக எல் சால்வடோர் உள்ளது.

21 வயதான எவலி பீட்ரிஸ் ஹெர்னன்டஸ் குரூஸ் என்ற அந்தப் பெண் ஏற்கனவே 30 ஆண்டு சிறைத் தண்டனையில் மூன்று ஆண்டுகள் சிறை அனுபவித்த நிலையில் கடந்த பெப்ரவரியில் விடுவிக்கப்பட்டார்.

மேன் முறையீட்டை அடுத்து இந்த வழக்கை மீள் விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணைக் காலத்தில் அவர் வீட்டில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டது. மகப்பேற்று பராமரிப்பை பெறாத நிலையில் அவர் குற்றம் புரிந்திருப்பதான வாதத்தை அரச வழக்கறிஞர்கள் தொடர்ந்து முன்வைத்த நிலையில், தாம் கர்ப்பமுற்றிருப்பது தெரியாதிருந்ததாக அந்தப் பெண் கூறி வந்தார். எல் சால்வடோரில் கருக்கலைப்பு வழக்கு ஒன்று மீள் விசாரணைக்கு உட்படுவது இது முதல் சந்தர்ப்பமாக இருந்தது.

எல் சால்வடோரில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கருக்கலைப்பு சட்டவிரோதம் என்பதோடு அதற்காக மரண தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Wed, 07/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை