சில இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்; மீனவர்கள் அவதானம்

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் ஹம்பாந்தோட்டையிலிருந்து மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோமீற்றர் வரை காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் நீர்கொழும்பிலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன்அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படுமெனவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

எனவே, கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் அவதானமாக இருக்குமாறும், வளிமண்டலவியல் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது. 

Wed, 07/03/2019 - 09:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை