தேசிய மேசைப்பந்து வெற்றி கிண்ணம்

பனாகொடை இராணுவ முகாமின் உள்ளக விளையாட்டரங்கில் ஜூன் 29 மற்றும் 30ம் திகதிகளில் இடம்பெற்றது. இதில் 270 குழுக்கள் கலந்துகொண்டதுடன் பிரதம அதிதியாக விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள உதவி பணிப்பாளர் திருமதி நதீகா தமயந்தி கலந்து கொண்டார்.

இதில் பிமந்தீ பண்டார 72வது தேசிய மகளிர் ஒற்றையர் கிண்ணத்தை வெற்றி கொண்டதுடன், சமீர கினிகே 72வது ஆண்கள் ஒற்றையர் கிண்ணத்தை வெற்றி கொண்டார்.

இறுதி முடிவுகள் பெண்களுக்கான திறந்த ஒற்றையர் ஆட்டம்

கண்டி ஹில்வூட் கல்லூரியின் பிமந்தீ பண்டார சீ.எஸ்.சீ.டி கெம்பஸின் முத்துமாலி பிரியதர்ஷணியை தோற்கடித்து வெற்றி பெற்றார். (11/02, 11/04, 12/10, 11/05)

ஆண்களுக்கான திறந்த ஒற்றையர் ஆட்டம்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சமீர கினிகே, STAG TT அகடமியின் ரொஹான் சிரிசேனாவை தோற்கடித்து வெற்றி பெற்றார். (09/11, 11/08, 05/11, 08/11/, 11/09, 11/05, 11/09).

பெண்களுக்கான திறந்த இரட்டையர் ஆட்டம்

கொழும்பு மகளிர் கல்லூரியின் ஜிதாரா வர்ணகுலசூரிய மற்றும் கண்டி மஹாமாய மகளிர் கல்லூரியின் தனூஷி ரொட்ரிகோ ஆகியோர் கண்டி ஹில்வூட் கல்லூரியின் பிமந்தீ பண்டார மற்றும் கொழும்பு விசாகா வித்தியாலயத்தின் சமத்சர பெர்னாண்டோ ஆகியோரைத் தோற்கடித்து வெற்றி பெற்றனர். (09/11, 11/07, 05/11, 11/07, 11/06)

ஆண்களுக்கான திறந்த இரட்டையர் ஆட்டம்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சமீர கினிகே மற்றும் STAG TT அகடமியின் ரொஷான் சிரிசேனா ஆகியோர் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் சுபுன வருஷவிதான மற்றும் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் ஹிருணா வருஷவிதான ஆகியோரைத் தோற்கடித்து வெற்றி பெற்றனர். (11/06,11/05, 11/06)

திறந்த கலவன் இரட்டையர் ஆட்டம்

STAG TT அகடமியின் ரொஷான் சிரிசேனா மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபையின் இஷார மதுரங்கி ஆகியோர் வித்யார்த டேபில் டெனிஸ் பழைய மாணவர் க்ளப்பின் கிரிஷான் விக்ரமரத்ன மற்றும் கண்டி ஹில்வூட் கல்லூரியின் பிமந்தீ பண்டார ஆகியோரைத் தோற்கடித்து வெற்றி பெற்றனர். (11/07, 07/11, 12/10, 11/02)

ஆறுதல் பெண்கள் ஒற்றையர் ஆட்டம்

இலங்கை இராணுவத்தின் தமோதி அனுராத, கொழும்பு மியூசியஸ் கல்லூரியின் ஒனேலி லெஹென்சாவை தோற்கடித்து வெற்றி பெற்றார். (16/14, 11/05)

ஆறுதல் ஆண்கள் ஒற்றையர் ஆட்டம்

அல் ஹூதா சர்வதேச பாடசாலையின் சபியுல்லா அக்ரம், போபிட்டிய லொயாலா கல்லூரியின் சித்தும் நிரங்கவை தோற்கடித்து வெற்றி பெற்றார். (11/06, 11/06)

(புத்தளம் விஷேட நிருபர்)

Fri, 07/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை