தமிழ் கூட்டமைப்பு ஆதரவளிக்க வேண்டும்

நம்பிக்கையில்லா பிரேரணை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உண்மையில் ஜனநாயகத்தையும், வடக்கு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருந்தால் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்க வேண்டுமென ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சி,ஆளும் கட்சி ஆசனங்களைக் கணக்கிட்டால் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்குத் தவறிய அரசாங்கத்தை தோற்கடிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்கத் தவறிய பிரதமர் மற்றும் அமைச்சரவை உள்ளிட்ட அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை எனக் கூறி கொண்டு வரப்பட்ட பிரேரணை மீதான விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றும்போதே அநுரகுமார திஸ்ஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் இரண்டு தரப்பு குற்றவாளிகள் உள்ளனர். ஒரு தரப்பினர் குண்டுத் தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தி உயிரிழப்புக்களையும், சொத்து இழப்புக்களையும் ஏற்படுத்திய குழுவினர். இந்தக் குழுவுடன் சம்பந்தப்பட்ட சிலர் உயிரிழந்துள்ளது டன், பலர் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குண்டுத் தாக்குதலுடன் நேரடியாக தொடர்புபட்ட மற்றுமொரு தரப்பும் உள்ளது. அத்தரப்பு, இந்தக் குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கான வாய்ப்புக்களிருந்தும் அதனைத் தடுப்பதில் தமது பொறுப்பிலிருந்து தவறியுள்ள அரசாங்கமாகும். இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப பொதுமக்களுக்கு தற்பொழுது வாய்ப்பு இல்லை. இதனாலேயே பொதுமக்களின் பிரதிநிதிகளாக தாம் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கத் தவறிய அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதற்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது. இந்த அரசாங்கம் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்க முடியாது. இதனை வீட்டுக்கு அனுப்ப சகலரும் ஒன்றிணைய வேண்டும். அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கை இழக்கப் பட்டுள்ளது.எனினும் அரசாங்கத்தை மாற்றுவதற்கான வாய்ப்பு பொதுமக்களுக்கு இல்லை. எனவேதான் பொதுமக்களின் சார்பில் பிரதிநிதித்துவம் வழங்கி நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவந்துள்ளோம்.

பாராளுமன்றத்தில் சிறுபான்மை பலத்தைக் கொண்ட அரசாங்கமே ஆளும் கட்சியாக உள்ளது. 106 பேர் மாத்திரமே ஆளும் கட்சியில் இருக்கும் நிலையில் எதிர்க்கட்சியில் பெரும்பான்மையோ னோர் உள்ளனர். இந்த நிலையில் அரசாங்கத்தைத் தோற்கடிக்க முடியும். எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனது உறுப்பினர்களுடன் நாளை (இன்று) சபைக்கு வந்து இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறிய அரசாங்கம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சிந்திக்க வேண்டும். பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் அங்கம் வகிக்கின்றார். இங்கு நடைபெறும் விசாரணைகளில் தனக்கு விளங்கும் விடயங்களுக்கு அமைய அவர் செயற்பட வேண்டும். இனிமேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனம் காக்க முடியாது. வடக்கு மக்களை அரசியல் ரீதியாகப் பிரதிநிதித்துவப்படுத்துவது மற்றும் ஜனநாயகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவது உண்மையாயின் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

2019 மே 5ஆம் திகதி ஐ.எஸ் தொடர்பாக பிரதமரிடம் கேட்ட போது 2014ஆம் ஆண்டு முதல் இவ்வாறான பயங்கரவாத குழுக்கள் செயற்பட்டுள்ளமை தொடர்பாக அறிந்துள்ளதாக கூறியுள்ளார். அப்படி யென்றால் அரசாங்கம் இது பற்றி அறிந்திருந்துள் ளது. இதேவேளை இதுபற்றி அரசாங்கம் அறிந்திருக்கவில்லையென கூறினாலும் முஸ்லிம் அமைப்புகள் பல முறைப்பாடுகளை முன்வைத்துள்ளன.

ஷம்ஸ் பாஹிம்,

மகேஸ்வரன் பிரசாத்

 

 

Thu, 07/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை