மேல் மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான உடற்பயிற்சி போட்டி

களுத்துறை வேர்ணன் யூ பெர்ணான்டோ விளையாட்டு அரங்கில் கடந்த 8 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற 2019- மேல் மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான உடற்பயிற்சி போட்டியில் பம்பலபிட்டி இந்துக் கல்லூரி அணியும் பம்பலபிட்டி இராமகிருஷ்ணா இந்து மகளிர் கல்லூரி அணியும் முறையே ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பிரிவுகளில் வெற்றி பெற்றதன் மூலம் எதிர் வரும் அகில இலங்கை ரீதியாக நடைபெற உள்ள பாடசாகளுக்கு இடையிலான உடற்பயிற்சி போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை அடைந்தன.

இதன்போது கடும் போட்டியின் மத்தியில் ஆண்கள் பிரிவில் பம்பலபிட்டிய இந்துக் கல்லூரி அணி 73.33 புள்ளிகளுடன் முலாம் இடத்தையும் ஹுமுல்லை சீ.டப்ளியூ.டப்ளியூ கன்னங்கர மத்திய மகா வித்தியாலய அணி 71 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் 48.33 புள்ளிகளைப் பெற்ற முல்லேரியா சிறீ ராகுல வித்தியாலய அணி மூன்றாம் இடத்தையும் கைப்பற்றின.

அதேநேரம் பெண்கள் பிரிவுக்கான போட்டிகளில் 77.66 புள்ளிகளைப் பெற்ற பம்பலபிட்டிய இராமகிருஷ்ணா இந்துக் மகளிர் கல்லூரி அணி முதலாம் இடத்தையும் 70.66 புள்ளிகளைப் பெற்ற களுத்துறை மகளிர் தேசிய பாடசாலை அணி இரண்டாம் இடத்தையும் ஹுனுமுல்லை சீ.டப்ளியூ.டப்ளியூ கன்னங்கர மத்திய கல்லூரி அணி 61 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் கைப்பற்றின.

முதலாம் இடத்தை பெற்ற இரு பாடசாலை அணிகளினதும் (பம்பலபிட்டிய இந்துக் கல்லூரி மற்றும் இராமகிருஷ்ணா இந்து மகளிர் கல்லூரி) பயிற்றுவிப்பாளராக நாகரத்தினம் ஈஸ்வரி கடமையாற்றிய வருவதுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் உடற்பயிற்சி போட்டிகளில் இப் பாடசாலையகளின் தேசிய மட்டத்திலான வெற்றிகளுக்கும் வழிவகுத்ததுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 களுத்துறை சுழற்சி நிருபர்

Thu, 07/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை