அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அணி சம்பியன்

உலக திறன்கள் தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று தொழிநுட்ப கல்லூரி ஏற்பாடு செய்த அணிக்கு 11பேர் 7 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி அட்டாளைசேனை ஆசிரியர் கலாசாலை மைதானத்திலும், இரண்டாவது நாள் மற்றும் இறுதிப் போட்டியும் (08.07.2019) திங்கட்கிழமை அக்கரைப்பற்று பொது மைதானத்திலும் நடைபெற்றது.

இச்சுற்றுப்போட்டியில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பத்து அரசாங்க காரியாலங்களின் கிரிக்கெட் அணியினருக்கு இடையில் நடைபெற்ற போட்டியின் இறுதிப்போட்டியில் அட்டாளைச்சேனை முஸ்லிம் தேசிய பாடசாலை அணியினரும், சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி அணியினரும் விளையாடினர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய அட்டாளைச்சேனை முஸ்லிம் தேசிய பாடசாலை அணியினர் தங்களுக்கு வழங்கப்பட்ட 07ஓவர்களை எதிர்கொண்டு 5 விக்கெட்களை இழந்து 74 ஓட்டங்களை பெற்றார்கள். இதில் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கோபிநாத் 43 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். பதிலுக்கு துடுப்பாடிய சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி அணியினர் சகல விக்கட்டுக்களையும் இழந்து 58 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தனர். இறுதிப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும், சுற்றுப் போட்டியின் சிறந்த வீரராகவும் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அணியைச் சேர்ந்த கோபிநாத் தெரிவு செய்யப்பட்டார்.

இறுதிப்போட்டியில் பிரதம அதிதியாக தொழில்நுட்ப கல்லூரி அதிபர் எஸ். சோமசூரியம், கல்லூரியின் பதிவாளர் ஐ.பியாஸ், பிரதி அதிபர் எஸ்.யூ.எம். இம்தியாஸ், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் எம்‌.எஸ்.எம்.பிஸ்றின், பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் முஹம்மட் அஸ்வத் மற்றும் கல்லூரியின் விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

(அக்கரைப்பற்று மத்திய நிருபர்)

Thu, 07/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை