நயாகரா அருவியிலிருந்து விழுந்தவர் உயிர் தப்பினார்

உலகின் மிகப் பெரிய நயாகரா அருவியிலிருந்து விழுந்தவர் இலேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

நயாகராவின் கிளை அருவியான ஹார்ஸ்சு அருவியில் விபத்து நேர்ந்தது. 57 மீற்றர் ஆழத்தில் ஒருவர் உதவிக்குக் காத்திருப்பதாக நயாகரா பூங்கா பொலிஸாருக்கு அதிகாலை 4 மணிக்கு அவசர அழைப்பு வந்தது.

உடனடியாகக் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அப்போது அந்த ஆடவர் அருவியின் விளிம்பில் உள்ள ஆற்றின் தடுப்புச் சுவரைப் பற்றி மேலே ஏறி ஒரு பாறையில் அமர்ந்திருப்பதைக் கண்டனர்.

உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. அருவியில் தவறி விழுந்தவர் யார் என்ற அடையாளத்தைக் பொலிஸார் வெளியிடவில்லை.

எந்த ஒரு கவசமும் அணியாமல் நயாகரா அருவியிலிருந்து விழுந்தவர்களில் நால்வர் இதுவரை உயிர் தப்பியிருப்பதாக உள்ளுர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Fri, 07/12/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக