எகிப்து டுட்டன்காமுன் மன்னரின் தங்க சவப்பெட்டி மறுசீரமைப்பு

சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட எகிப்தின் பண்டைய மன்னரான டுட்டன்காமுனின் தங்கம் பூசப்பட்ட மரப்பலகையாலான சவப்பெட்டியை முதல் முறை மறுசீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

டுட்டன்காமுன் கல்லறையில் சேகரிக்கப்பட்ட புதையல்கள் புதிய எகிப்து அருங்காட்சியத்தில் காட்சிக்கு வைக்கப்படும் என்று எகிப்து தொல்பொருள் அமைச்சி அறிவித்துள்ளது. கீசா பிரமிட்டுக்கு அருகில் இந்த அருங்காட்சியகம் அடுத்த ஆண்டு திறக்கப்படவுள்ளது.

18 ஆவது வம்சத்தைச் சேர்ந்த பாரோ மன்னனரான டுட்்டன்காமுனின் கல்லறை 1922 ஆம் ஆண்டு பிரிட்டன் நாட்டு தொல்பொருள் ஆராச்சியாளர் ஹோவார்ட் காட்டரினால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கல்லறை 5,000 ஆண்டுகளாக திறக்கப்படமல் இருந்த நிலையில் அதில் இருந்த புதையல்கள் அனைத்தும் மீட்கப்பட்டன.

இந்நிலையில் அந்த சவப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதன் பின் முதல் முறையாக மறுசீரமைப்பு பணிகளுக்காக தெற்கு எகிப்தை நோக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

“சவப்பெட்டியின் தங்க மூலமில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பது உற்பட அதிக சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. பொதுவாக அனைத்து தங்க அடுக்குகளும் பலவீனமடைந்துள்ளன” என்று எகிப்து அருங்காட்சிகம் குறிப்பிட்டுள்ளது.

ஒன்பது வயதில் மன்னராக முடிசூடிய டுட்டன்காமுன் 18 ஆவது வம்பசத்தின் கடைசி மன்னர்களில் ஒருவராக கி.மு 1333 தொடக்கம் 1323 வரை ஆட்சி புரிந்துள்ளார்.

Fri, 07/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை