அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக அந்நாட்டு பிரதிநிதிகள் சபை வாக்களித்துள்ளது.

அல் கிரீன் என்ற உறுப்பினர் பிரதிநிதிகள் சபையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு எதிரான இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார். பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களே அதிகம் உள்ளனர்.

முதலாவதாக வாக்களித்த சபாநாயகர் நான்சி பெலோசி தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தார். இதையடுத்து பிரதிநிதிகள் சபையில் டிரம்புக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக 332 வாக்குகளும், ஆதரவாக 95 வாக்குகளும் பதிவானதால் அந்தத் தீர்மானம் தோல்வியுற்றது.

ஆளுங்கட்சியுடன் கருத்து மோதல்கள் இருந்த போதும் ஜனநாயகக் கட்சியினரில் பலர் டிரம்புக்கு எதிரான இந்தத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர்.

கடந்த தீர்மானத்தின் போது 66 வாக்குகளையே தான் முன் மொழிந்த தீர்மானம் பெற்றாலும், தற்போது 95 பேர் ஆதரவளித்திருப்பதாக அல் கிரீன் கூறியுள்ளார்.

அமெரிக்க அரசியலமைப்பின்படி அந்நாட்டு ஜனாதிபதியின் தேசத்துரோகம், ஊழல் அல்லது ஏனைய மோசமான குற்றங்கள் அல்லது தவறான செயல்களுக்காக அவரை பதவி நீக்குவதற்கு அனுமதி உள்ளது.

இதற்கான நடைமுறை பிரதிநிதிகள் சபையில் இருந்தே ஆரம்பிப்பதோடு அதற்கு சாதாரண பெரும்பான்மை போதுமானதாகும். இதனையடுத்து இது தொடர்பான விசாரணை செனட்டில் நடைபெறும். எனினும் அங்கு ஜனாதிபதியை நீக்குவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையாகும். அமெரிக்க வரலாற்றி இந்த இலக்கு இதுவரை எட்டப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Fri, 07/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை