பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறிக்கு ஜூலை 9வரை விளக்கமறியல்

குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ, கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இருவரையும் எதிர்வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நேற்று புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் பிரகாரம் இருவரையும் கைதுசெய்யுமாறு சட்ட மாஅதிபர், பொலிஸ் மாஅதிபருக்கு நேற்றுமுன்தினம் காலை உத்தரவிட்டிருந்தார்.

கைதுஉத்தரவு பிறக்கப்பட்ட மறுகணமே இருவரும் வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்கு அனுமதியாகியிருந்தனர். என்றாலும், வைத்தியசாலைக்குச் சென்ற குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இருவரையும் கைதுசெய்தனர்.

இதன்பின்னர் வைத்தியசாலைக்குச் சென்ற கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இருவரையும் நேற்றுவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.

நேற்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இருவரும் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே எதிர்வரும் 9ஆம் திகதிவரை தடுத்துவைத்து விசாரணைகளை மேற்கொள்ள குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அனுமதியளித்து உத்தரவுப்பிறப்பித்தார்.

Thu, 07/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை