மூதூர் வீரர் நிப்ராஸ் 800, 1500 மீற்றர் போட்டிகளில் பங்கேற்க இத்தாலி பயணம்

எமது நாட்டில் இலைமறை காயாக பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் ஆர்.எம். நிப்ராஸ் இத்தாலியில் நடைபெறும் உலக பல்கலைக்கழங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் 800 மீற்றர், 1500 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் பொருட்டு இலங்கை பல்கலைக்கழக அணியை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கு கொண்டுள்ளார்.

மூதூர் பிரதேச செயலக பிரிவில் உள்ள ஆலிம்நகர் கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட ஆர்.எம். நிப்ராஸ் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்ததுடன், தனது பாடசாலை காலங்களில் அதிக விளையாட்டுக்களில் பங்குகொண்டதோடு தாய் நாட்டிக்கு பெருமை சேர்க்க வேண்டுமென்ற அவாவில் 1500 மீற்றர் ஓட்டப்போட்டியில் 48 வருட சாதனையை முடியடித்து 03 நிமிடம் 49 செக்கனில் ஓடி முடித்து சாதனை படைத்த பெருமை இவருக்கு உண்டு. இதேவேளை பல்கலைக்கழங்களுக்கிடையினான விளையாட்டு விழாவில் தடகளப் போட்டியில் பங்குபற்றியுள்ள ஆர்.எம். நிப்ராஸ் கடந்த 03.07.2019 தொடக்கம் எதிர்வரும் 14.07.2019 வரை இலங்கை பல்கலைக்கழக அணியை பிரதிநிதித்துவப்படுத்திய நிலையிலேயே இத்தாலி சென்றுள்ளார்.

மேலும் பொருளாதாரம் பல சாதனைகளுக்கு ஒரு முட்டுக்கட்டையாக காணப்படும் அதேவேளை இதனை மனித உரிமைகள் சமாதான தூதுவர்கள் அமைப்பின் அகில இலங்கைக்கான விளையாட்டு மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளருக்கான பணிப்பாளர் குணாலனினால் இவருக்கான நலன்கள் கவனிக்கப்பட்டு வருகின்றன.

(மூதூர் தினகரன் நிருபர்)

Tue, 07/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை