சமூக தொடர்பாடல் வசதியளிப்பாளர்கள் 76 பேருக்கான நியமனங்கள் வழங்கும

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் பெருந்தோட்ட சமூக தொடர்பாடல் வசதியளிப்பாளர்கள் 76 பேருக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (04) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மலைநாட்டுப் புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. சுரேஸ் மற்றும் அமைச்சின் உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

Fri, 07/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை