17 அமெரிக்க உளவாளிகள் சிக்கியதாக ஈரான் அறிவிப்பு

அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது செய்துள்ளதாகவும் அவர்களில் சிலருக்கு மரண தண்டனை அளித்ததாகவும் ஈரான் குறிப்பிட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய அந்த நபர்கள் அணு, இராணுவம் மற்றும் ஏனைய துறைகள் சார்ந்த விடயத்தில் உளவு பார்த்து தகவல்களை திரட்டியதாக ஈரான் உளவு அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா உளவு பார்த்தது குறித்து ஓர் ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் உளவுத்துறை அமைச்சர் மஹ்மூத் அலாவி தெரிவித்தார். இந்த ஆவணப்படத்தின் முன்னோட்ட குறுந்தகட்டையும் அவர் வெளியிட்டார். சில உளாவாளிகள் அமெரிக்காவின் விசா வலையில் சிக்கி இந்தப் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். அதாவது அமெரிக்கா செல்ல விரும்பும் ஈரான் மக்களுக்கு விசா அளிப்பதாக கூறி அவர்களை உளவுக்காக அமெரிக்கா பயன்படுத்தி உள்ளது என்றார். எனினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார். இவை அனைத்தும் பொய் என்று அவர் கூறினார்.

அணு ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Wed, 07/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை