ஜெரூசலத்தில் சவூதியரை துரத்திய பலஸ்தீனர்கள்

இஸ்ரேல் அனுசரணையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சவூதி அரேபியர் ஒருவரை ஆக்கிரமிப்பு கிழக்கு ஜெரூசலத்தின் அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் இருந்து பலஸ்தீனர்கள் அடித்துத் துரத்தியுள்ளனர். வளைகுடா நாட்டவர் போன்று சம்பிரதாய ஆடை அணிந்த முஹமது சவூத் என்ற அந்த நபர் மீது ஜெரூசலத்தின் பழைய நகரில் வைத்து கடந்த திங்கட்கிழமை பலஸ்தீனர்கள் பிளாஸ்டிக் கதிரைகளை வீசி எறிந்ததோடு துரோகி மற்றும் சியோனிசவாதி என்று தூற்றினார்கள்

இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக தளத்தில் பரவியுள்ளது. இஸ்ரேலுடனான அரபு ஒற்றுமை பெரும்பாலும் பிராந்தியத்தில் தடுக்கப்பட்ட ஒன்றாகவே பார்க்கப்பட்டு வருகிறது. தன்னை சட்டம் கற்கும் மாணவன் என குறிப்பிட்டிருக்கும் சவூத் என்ற அந்த நபர், இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சின் அனுசரணையில் சென்ற ஆறு பேர் கொண்ட தூதுக்குழுவில் இடம்பெற்றதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தத் தூதுக் குழுவில் ஐக்கிய அரபு இராச்சியம், ஈராக், எகிப்து மற்றும் ஜோர்தான் நாட்டு ஊடகவியலாளர்களும் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Wed, 07/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை