பொலிஸ் வாகனத்தில் மோதிய போதைப்பொருள் ஏற்றிய வேன்

அவுஸ்திரேலியாவில் போதைப்பொருள் ஏற்றிச் சென்ற வேன், பொலிஸ் வாகனத்தின் மீது மோதி சிக்கிக் கொண்டுள்ளது.

காலை நேரத்தில் சிட்னி பொலிஸ் நிலையம் அருகே, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் வாகனம் ஒன்றின் மீது மோதிய வேன் நிற்காமல் சென்றது. இதனால் உருவான சத்தம் கேட்டு அங்கு வந்த பொலிஸார், காரின் முன்பக்க பகுதி சேதமடைந்திருந்ததை கண்டு, விபத்துக்கு காரணமான வாகனத்தை அறிய சி.சி.டி.வி கெமராவை ஆய்வு செய்தனர். பின்னர் விபத்துக்கு காரணமான வேனை துரத்தி சென்ற பொலிஸார், ஈஸ்ட்வுட் அருகே மடக்கி பிடித்தனர்.

அந்த வாகனத்தை சோதனை இட்டத்தில், அட்டைப்பெட்டிகளில் ‘மெத்தம்பட்டமைன்’ என்ற போதைப்பொருளை கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. 273 கிலோ எடையிலான இந்த போதைப்பொருள் 140 மில்லியன் டொலர் பெறுமதி கொண்டதாகும்.

இதையடுத்து வேனுடன் போதைப்பொருளை பறிமுதல் செய்த பொலிஸார், ஓட்டுநரைக் கைது செய்து கடத்தல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Wed, 07/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை