நீர்கொழும்பு மாநகர சபை எதிர்க்கட்சித் தலைவருக்கு 17 வரை விளக்கமறியல்

வீட்டுக்குள் அத்துமீறி பிரவேசித்து நபரொருவரைத் தாக்கி, வீட்டைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான நீர்கொழும்பு மாநகர சபை

எதிர்க் கட்சித் தலைவர் ரொயிஸ் விஜித பெர்ணான்டோவை எதிர்வரும் ஜுலை 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட இவரை பொலிஸார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே எதிர்வரும் ஜுலை 17ம் திகதி வரை,அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க் கட்சி தலைவரான இவர், ஐ. தே. கட்சி நீர்கொழும்பு தொகுதி முன்னாள் அமைப்பாளருமாவார்.

கட்டானை பொலிஸ் பிரிவில் சீன நாட்டு பெண்மணியொருவர் வசித்த வீட்டிற்குள் நுழைந்த இவர், குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரி எனத் தம்மை இனங்காட்டி அங்குள்ளோரை அச்சுறுத்தி யுள்ளார்.பின்னர் அங்கு தாக்குதல் மேற்கொண்டு பொருட்களை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பிலே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

மேற்படி வீட்டில் இருந்த வேன் ஒன்றையும் மாணிக்கக் கல்லையும் மூன்று கையடக்கத் தொலை பேசிகளையும் 75 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் ஒரு தொகை

பணத்தையும் இவர் கொள்ளையிட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் சந்தேக நபர்களான ஐவர் நீர்கொழும்பு பொலிஸாரால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சுனில் சில்வா என்ற நபரைப் பொலிஸார் தேடி வருகின்றனர். (ஸ)

 நீர்கொழும்பு தினகரன் நிருபர்

Tue, 07/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை