மரண தண்டனைக்கு சர்வோதயத் தலைவர் கண்டனம்

மரண தண்டனையை நிறைவேற்றும் தீர்மானத்தை வன்மையாகக் கண்டிப்பதாக சர்வோதய இயக்கம், ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.

சிறைக் கைதிகளின் புனர்வாழ்வுக்கு கடந்த 20 வருடங்களாக ஆன்மீக உளநல நிகழ்ச்சித் திட்டத்தினூடாக நேரடியாக பங்களிப்புச் செய்த பிரதான சிவில் அமைப்பு என்ற வகையில்,

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2019 யூன் மாதம் 26 ஆம் திகதி சர்வோதய இயக்கம் கடிதம் அனுப்பியிருந்தது. அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

1999 ஆம் ஆண்டு சிறைக் கைதிகள் நலனோம்பல் சங்கத்தின் அப்போதைய தலைவராக இருந்த பாராளுமன்ற முன்னாள் செயலாளர் நாயகம் சாம் விஜேசிங்க, சர்வோதய இயக்கத்தின் ஆன்மீக பிரிவான விஸ்வ நிகேதன் சர்வதேச சமாதான இல்லத்திற்கு வருகை தந்து,சிறைக் கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்கும் ஒரு முறைாயாக “தியானத்தை” ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.தண்டனை் காலத்தைப் பூர்த்தி செய்த பின்னரும் சிலர் குற்றங்கள் புரிந்து சிறைச் சாலைக்கு வரிகின்றனர்.எனினும் ஆன்மீக நிகழ்ச்சியில் பங்கு கொண்ட எவரும் மீண்டும் குற்றங்களில் ஈடுபடவில்லை என சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் சிறைச் சாலைகளில் இடம்பெறும் கலவரங்களிலும் ஆன்மீகப் பயிற்சி பெற்றோர் எவரும் ஈடுபடவில்லை.

கடந்த 20 வருடங்களில் 50,000 க்கு மேற்பட்ட சிறைக் கைதிகள் சர்வோதயத்தால் நடத்தப்பட்ட சுமார் 2501 ஆன்மீக உளநல ஆன்மீக நிகழ்ச்சித் திட்டங்கள் ஊடாக புனர்வாழ்வு பெற்றுள்ளனர். இவர்களிடையே சிறைத் தண்டனைக் காலத்தை நிறைவுசெய்து விடுதலையடைந்த நான்கு கைதிகள் பௌத்த பிக்குகளாக துறவறம் பூண்டமை இந்தப் புனர்வாழ்வு பணியின் திருப்பு முனையைப் பதிவு செய்கிறது.

எனவே மரண தண்டனையை நிறைவேற்றுதல் ஒட்டுமொத்த சமூகத்தின் முன்னேற்றத்தை பின்னடையச் செய்யும் தொலைநோக்கற்ற தீர்வாகும்.

எனவே சமூகத்தின் ஆன்மீக உயிர் நாடியை தகர்த்தெறிகின்ற இத்தகைய தீர்வுகளை நடைமுறைப் படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளும்படியும் சர்வோதயம் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tue, 07/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை