சிரிய வான் தாக்குதல்களில் 15 பொதுமக்கள் உயிரிழப்பு

சிரிய அரச படை மற்றும் ரஷ்யா கடந்த பல மாதங்களாக தாக்குதல் நடத்தி வரும் வட மேற்கு சிரியாவில் கடந்த சனிக்கிழமை நடத்திய வான் தாக்குதல்களில் ஆறு சிறுவர்கள் மற்றும் சிசுக்கள் உட்பட 15 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் முகாம் ஒன்றின் மீது ரஷ்ய போர் விமானங்கள் வீசிய குண்டுகளாலேயே அதிக சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இத்லிப் பிராந்தியத்தில் ஷெய்குன் நகருக்கு அருகிலேயே இந்த முகாம் உள்ளது.

இதற்கு சில மணி நேரத்திற்கு பின்னர் அடையாளம் தெரியாத விமானம் ஒன்று நடத்திய தாக்குதலில் ஆடவர் ஒருவரும் அவரது கர்ப்பிணி மனைவியும் கொல்லப்பட்டதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஹமா மாகாணத்தின் வடக்கு பகுதியில் இடம்பெற்ற பீரங்கி தாக்குதல் ஒன்றில் மூன்று சிறுவர்கள் கொல்லப்பட்டதோடு இதில் ஒரு குழந்தையும் அடங்குவதாக பிரிட்டனைத் தளமாகக் கொண்ட காண்காணிப்புக் குழு குறிப்பிட்டுள்ளது.

கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் இருக்கும் இத்லிப் மாகாணம் மீது கடந்த ஏப்ரம் கடைசி தொடக்கம் ரஷ்யா மற்றும் சிரிய அரச படை நடத்தி வரும் உக்கிர தாக்குதல்களில் 590க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Mon, 07/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை