ஓரினத் திருமணம்: ஈக்வடோர் அனுமதி

ஈக்வடோரின் அரசமைப்பு நீதிமன்றம் ஓரினத் திருமணத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் பழமைவாதக் கத்தோலிக்கத் தென்னமெரிக்க நாடான ஈக்வடோரில் ஓரினத் திருமணத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

 ஐந்துக்கு நான்கு என்ற வாக்கெடுப்பில் அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அர்ஜென்ட்டினா, பிரேசில், கொலம்பியா ஆகிய நாடுகளின் வரிசையில், ஓரினத் திருமணத்திற்கு அனுமதி வழங்கும் நாடாக ஈக்வடோரும் சேர்ந்துள்ளது.

எவ்விதப் பாகுபாடுமின்றி எல்லா மக்களின் மனித உரிமைகளும் அங்கீகரிக்கப்படுவதை, அண்மைய முடிவு காட்டுவதாக, வழக்கறிஞர் ஒருவர் குறிப்பிட்டார்.

அவர், ஓரினத் திருமணம் செய்துகொள்ள விரும்புவோருக்கு சட்ட ஆலோசனை வழங்கி வருகிறார்.

Fri, 06/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை