உகண்டாவிலும் எபோலா தொற்று

உகண்டாவில் முதல் எபோலா தொற்றுநோய்ச் சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் அண்டை நாடுகளில் எபோலா நோய் தற்போது பரவிவருகிறது. பாதிக்கப்பட்ட ஐந்து வயதுச் சிறுவன் கொங்கோ குடியரசுக்குச் சென்று திரும்பியதாகத் தெரிகிறது. சிறுவனும் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கிழக்கு கொங்கோவில் கடந்த ஓகஸ்ட் மாதம் பரவ ஆரம்பித்த அந்தத் தொற்றுநோயால் சுமார் 1,400 பேர் உயிரிழந்திருப்பதாக கொங்கோ சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

உகண்டா அண்மைய ஆண்டுகளில் அவ்வப்போது எபோலா நோய்ப் பரவலுக்குள்ளாகி வந்துள்ளது.

Fri, 06/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை